< Back
புதுச்சேரி
புதுச்சேரி
செவிலியர் திடீர் மாயம்
|24 Aug 2023 9:36 PM IST
திருநள்ளாறு அருகே மாயமான செவிலியரை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
திருநள்ளாறு
திருநள்ளாறு அடுத்த சேத்தூர் பண்டாரவாடை கிராமத்தை சேர்ந்தவர் ரவி, இவரது மகள் வைஷ்ணவி (வயது 19). செவிலியர் பயிற்சி முடித்துவிட்டு வேலையை எதிர்பார்த்து இருந்துவந்தார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த வைஷ்ணவி திடீரென்று மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பல இடங்களில் தேடிப்பார்த்தனர். ஆனால் அவர் எங்கு சென்றார் என்ற விவரம் தெரியவில்லை. இதுகுறித்து திருநள்ளாறு போலீசில் வைஷ்ணவியின் பெற்றோர் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான வைஷ்ணவியை தேடி வருகின்றனர்.