< Back
புதுச்சேரி
தாய், மகனை தாக்கி காய்கறி கடை சூறை
புதுச்சேரி

தாய், மகனை தாக்கி காய்கறி கடை சூறை

தினத்தந்தி
|
1 Oct 2023 11:07 PM IST

அரியாங்குப்பம் மார்க்கெட்டில் தாய், மகனை தாக்கி காய்கறி கடையை சூறையாடிய 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அரியாங்குப்பம்

அரியாங்குப்பம் மார்க்கெட்டில் தாய், மகனை தாக்கி காய்கறி கடையை சூறையாடிய 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கடன் பிரச்சினை

பாகூர் அடுத்த பரிக்கல்பட்டு மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ். இவரது மனைவி ஜனார்த்தாம்பாள் (வயது 35). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கணவன்- மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக, வானவில் நகர் பகுதியில் ஜெயபிரகாஷ் தனியாக வசித்து வருகிறார். ஜனார்த்தாம்பாள் அரியாங்குப்பம் மார்க்கெட்டில் காய்கறி கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார்.

கடந்த சில மாதங்களுக்கு முன் கடை வியாபாரத்திற்காக ஜெயபிரகாஷ் அரியாங்குப்பம் பகுதியை சேர்ந்த ரத்தின திலகம் என்பவரிடம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. இந்த கடனை ஜனார்த்தாம்பாளிடம் ரத்தினதிலகம் கேட்டு வந்துள்ளார். ஆனால், கணவர் வாங்கிய கடனுக்கும் எனக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என அவர் கூறியுள்ளார்.

தாய், மகன் மீது தாக்குதல்

சம்பவத்தன்று ரத்தினதிலகம் மற்றும் செல்வா ஆகியோர் காய்கறி கடைக்கு வந்து ஜனார்த்தம்பாளிடம் பணம் கேட்டு தரக்குறைவாக பேசியுள்ளனர். இதனை தட்டிக்கேட்ட அவரையும், அவரது மகன்களையும் தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் கடையில் இருந்த காய்கறி உள்ளிட்ட பொருட்களை சூறையாடியுள்ளனர்.

தாக்குதலில் காயமடைந்த ஜனார்த்தம்பாள், அவரது மகன்கள் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர். பின்னர் இதுபற்றி அரியாங்குப்பம் போலீஸ் நிலையத்தில் ஜனார்த்தம்பாள் புகார் அளித்தார். அதன்பேரில் ரத்தினதிலகம், செலவா ஆகியோர் மீது போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகானந்தம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்