< Back
புதுச்சேரி
தாய், மகனை தாக்கி கொலை மிரட்டல்
புதுச்சேரி

தாய், மகனை தாக்கி கொலை மிரட்டல்

தினத்தந்தி
|
10 Oct 2023 10:49 PM IST

கடன் பிரச்சினையில் தாய், மகனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த கணவன், மனைவி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

பாகூர்

கடன் பிரச்சினையில் தாய், மகனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த கணவன், மனைவி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ரூ.3 லட்சம் கடன்

பாகூர் ராமு நாயக்கர் நகரை சேர்ந்தவர் திருவேங்கடம் (வயது 45). இவரது மனைவி சுகுணா (38). இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். இந்த நிலையில், பாகூர் கணபதி நகரை சேர்ந்த நாராயணசாமி என்கின்ற ஜனார்த்தனன், கடந்த 2019-ம் ஆண்டு திருவேங்கடத்திடம் ரூ.3 லட்சம் பணம் மற்றும் 6 பவுன் நகையை கடனாக கொடுத்துள்ளார்.

கொடுத்த பணம் மற்றும் நகையை திரும்ப கேட்டபோது, ஜனார்த்தனன் காலம் கடத்தி வந்துள்ளார். இந்த நிலையில் திருவேங்கடத்தின் மகன் திருநாவுக்கரசு ஜனார்த்தனன் வீட்டுக்கு சென்று, தனக்கு கல்வி கட்டணம் கட்ட வேண்டி இருப்பதால், பணம் தருமாறு கேட்டுள்ளார்.

உருட்டுக்கட்டையால் தாக்குதல்

அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ஜனார்த்தனன், அவரது மனைவி அன்னலட்சுமி இருவரும் சேர்ந்து திருநாவுக்கரசை உருட்டுக்கட்டையால் தாக்கினார். இதை தட்டிக்கேட்ட சுகுணாவையும் அவர்கள் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த அவர் பாகூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.

பின்னர் இதுபற்றி பாகூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் ஜனார்த்தனன், அன்னலட்சுமி ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்