< Back
புதுச்சேரி
புதுச்சேரி
மூதாட்டியை பீா்பாட்டிலால் குத்த முயன்றவர் கைது
|27 Aug 2023 11:39 PM IST
மூலக்குளம் அருகே மூதாட்டியை பீா்பாட்டிலால் குத்த முயன்றவரை போலீசார் கைது செய்தனர்.
மூலக்குளம்
மேட்டுப்பாளையம் சாணாரப்பேட் பகுதியில் உள்ள பொதுக்கழிப்பறையை அதே பகுதியை சேர்ந்த கலா (வயது 65) என்பவர் பராமரித்து வருகிறார். நேற்று முன்தினம் கலா வழக்கம்போல் கழிப்பறையை சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த குமார் என்ற கழுகு குமார் (41), கலாவை தகாத வார்த்தையால் திட்டி, பீர்பாட்டிலால் தாக்க முயன்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கூச்சல் போட்டார். இதை கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வரவே குமார் அங்கிருந்து தப்பியோடி விட்டார். இது குறித்து கலா கொடுத்த புகாரின்பேரில் மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து குமாரை கைது செய்தனர்.