< Back
புதுச்சேரி
தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளி கைது
புதுச்சேரி

தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளி கைது

தினத்தந்தி
|
23 Jun 2022 10:52 PM IST

ரவுடியை வெட்டிக் கொலை செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளியை போலீசார் கைது செய்தனர்.

அரியாங்குப்பம்

ரவுடியை வெட்டிக் கொலை செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளியை போலீசார் கைது செய்தனர்.

ரவுடி கொலை

லாஸ்பேட்டை அருகே கருவடிக்குப்பம் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் சரத்குமார் என்ற பொடிமாஸ் (வயது 27). பிரபல ரவுடியான இவர் மீது வெடிகுண்டு வீசுதல், கொலை முயற்சி, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்தன.

இவர் அரியாங்குப்பம் தெற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் எதிரே தனது மாமா வெங்கடேசன் வீட்டில் தங்கி இருந்தார். இதை நோட்டமிட்ட மர்மநபர்கள், வீடுபுகுந்து அவரை வெட்டிக் கொலை செய்தனர்.

முக்கிய குற்றவாளி கைது

இந்த கொலை வழக்கு தொடர்பாக அரியாங்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஏற்கனவே 7 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் 2 பேர் நெய்வேலி கோட்டில் சரணடைந்தனர்.

இந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக செயல்பட்ட பணி நீக்கம் செய்யப்பட்ட ஐ.ஆர்.பி.என். போலீஸ்காரர் ஜெகன் என்பவரை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

இந்தநிலையில் கருவடிக்குப்பம் பகுதியில் அவர் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார், அவரை சுற்றி வளைத்து கைது செய்தனர்.

மேலும் செய்திகள்