< Back
புதுச்சேரி
குடிசை, கோவில் பந்தல் தீப்பிடித்து எரிந்தன
புதுச்சேரி

குடிசை, கோவில் பந்தல் தீப்பிடித்து எரிந்தன

தினத்தந்தி
|
25 Oct 2022 10:24 PM IST

தீபாவளி பண்டிகையின்போது வெடித்த பட்டாசுகளின் தீப்பொறிபட்டு குடிசை மற்றும் கோவில் பந்தல் தீப்பிடித்து எரிந்தன.

புதுச்சேரி

தீபாவளி பண்டிகையின்போது வெடித்த பட்டாசுகளின் தீப்பொறிபட்டு குடிசை மற்றும் கோவில் பந்தல் தீப்பிடித்து எரிந்தன.

தீ விபத்து

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு வெடிப்பதால் தீ விபத்துகள் தொடர்ந்து ஏற்பட்டு வருகின்றன. இந்த தீபாவளி பண்டிகைக்கும் ஆங்காங்கே தீ விபத்துகள் ஏற்பட்டன.

தீ விபத்து ஏற்பட்டால் உடனடியாக சென்று தீயை அணைக்கும் விதமாக அரியாங்குப்பத்திலும் தீயணைப்பு வண்டி ஒன்று தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது. தீ விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் புதுவை, வில்லியனூர் உள்ளிட்ட பல்வேறு தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.

குடிசை, கோவில் பந்தல் எரிந்தது

புதுவை முருங்கப்பாக்கம் சேத்திலால் நகரில் செல்வதுரை என்பவரது குடிசைவீடு பட்டாசு தீப்பொறி பட்டு எரிந்தது. இதில் ரூ.10 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாயின.

சோலைநகரில் சோலைவாழியம்மன் கோவில் கும்பாபிசேகத்தையொட்டி போடப்பட்டிருந்த பந்தலும் பட்டாசு பொறிபட்டு தீப்பிடித்தது. முத்தியார்பேட்டை சுப்ரமணியர் கோவில் வீதியில் தீபக் என்பவரின் இருசக்கர வாகனமும் தீப்பொறிபட்டு எரிந்து சேதமானது.

கோச்சிங் சென்டர்

கடலூர் மெயின்ரோட்டில் கைலாஷ் சேட் என்பவரது அடகுகடை போர்டு பட்டாசு பொறிபட்டு தீப்பிடித்து எரிந்தது. வில்லியனூர் நவசன்னதி தெருவில் இயங்கிவந்த கோச்சிங் சென்டரில் பட்டாசுபட்டு ஏற்பட்ட தீ விபத்தி ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாயின. பூரணாங்குப்பம் பெருமாள் கார்டன் பகுதியில் பட்டாசு வெடித்து சிதறியதில் தண்டபாணி என்பவரது குடிசை வீடு பற்றி எரிந்தது. இந்த தீ அருகில் இருந்த சிவலோகம் என்பவரது வீட்டிலும் பற்றியது. இந்த சம்பவத்தில் ரூ.1.50 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாயின.

மேலும் செய்திகள்