< Back
புதுச்சேரி
மாணவர்களுக்கான கல்வி கட்டணத்தை அரசே செலுத்த வேண்டும்
புதுச்சேரி

மாணவர்களுக்கான கல்வி கட்டணத்தை அரசே செலுத்த வேண்டும்

தினத்தந்தி
|
11 Sept 2023 10:14 PM IST

10 சதவீத இடஒதுக்கீட்டில் மருத்துவ படிப்பில் சேர்ந்த மாணவர்களுக்கான கல்வி கட்டணத்தை அரசே செலுத்த வேண்டும் என மாணவர், பெற்றோர் நலச்சங்கம் வலியுறுத்தினர்.

புதுச்சேரி

புதுச்சேரி மாநில மாணவர்-பெற்றோர் நலச்சங்க தலைவர் வை.பாலா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

புதுச்சேரி அரசால் சென்டாக் கலந்தாய்வு மூலம் அரசு மற்றும் தனியார் மருத்துவக்கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் தனியார் மருத்துவக்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேரும் மாணவர்களுக்கு பெருந்தலைவர் காமராஜர் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் அரசு கல்லூரிகளில் மருத்துவம், பல் மருத்துவம், பொறியியல், கால்நடை மருத்துவம், செவிலியர் போன்ற படிப்பிற்கு இதுவரை நிதிஉதவி வழங்கப்படவில்லை. இதனால் ஏழை எளிய மக்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். தற்போது அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீதம் உள் ஒதுக்கீடு் வழங்கப்பட்டுள்ளது. அந்த இடஒதுக்கீட்டில் மருத்துவ படிப்பில் சேரும் அனைத்து அரசு பள்ளி மாணவர்களுக்கும் கல்வி கட்டணத்தை புதுவை அரசே முழுவதுமாக செலுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்