< Back
புதுச்சேரி
காமராஜர் சிலையை கண்டுகொள்ளாத அரசு
புதுச்சேரி

காமராஜர் சிலையை கண்டுகொள்ளாத அரசு

தினத்தந்தி
|
15 July 2023 10:06 PM IST

பாகூர் அருகே முள்ளோடையில் அரசு கண்டுகொள்ளாமல் விட்ட காமராஜர் சிலைக்கு ஆட்டோ டிரைவர்கள் மரியாதை செலுத்தினர்.

பாகூர்

காமராஜரின் பிறந்தநாளையொட்டி புதுவையில் பல்வேறு பகுதியில் அவரது உருவ சிலைக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதேபோல் அரசு அலுவலகங்கள், பள்ளிகளிலும் கொண்டாடி வருகின்றனர்.

இந்தநிலையில் மாநில எல்லையான முள்ளோடையில் புதுச்சேரி-கடலூர் சாலையில் காமராஜர் சிலையுடன் நுழைவுவாயில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை எப்போதும் பராமரிப்பு இன்றி பாழடைந்து காணப்படும். மாநிலம் முழுவதும் இனறு பிறந்தநாளை அரசு கொண்டாடிய நிலையில் கூட முள்ளோடையில் உள்ள காமராஜர் சிலையை அரசு கண்டு கொள்ளாமல் விட்டு விட்டது. இதனால் சிலை அழுக்கடைந்து அடையாளமே தெரியாமல் இருந்தது.

சிலையின் அவல நிலையை கண்ட ஆட்டோ டிரைவர்கள் சிலர் அங்கு வந்து காமராஜர் சிலையை சுத்தம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்திவிட்டு சென்றனர்.

மேலும் செய்திகள்