< Back
புதுச்சேரி
கம்யூனிஸ்டு கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
புதுச்சேரி

கம்யூனிஸ்டு கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

தினத்தந்தி
|
16 Sept 2023 7:01 PM IST

கோவில் நிலத்தை அபகரிப்பு மற்றும் தரமற்ற மருந்து கொள்முதல் செய்ததை கண்டித்து கம்யூனிஸ்டு கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுச்சேரி

காமாட்சி அம்மன் கோவில் நில அபகரிப்பு குற்றவாளிகளை காப்பாற்றக்கூடாது, பத்திரப்பதிவு துறையை சீரமைக்க வேண்டும், எம்.எல்.ஏ.க்கள் ஜான்குமார், ரிச்சர்ட் ஆகியோரை கைது செய்யவேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி புதுவை சட்டசபை அருகே இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு மாநில செயலாளர் சலீம் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் துணை செயலாளர் சேதுசெல்வம், முன்னாள் அமைச்சர் விசுவநாதன், தேசியக்குழு உறுப்பினர் தினேஷ் பொன்னையா, மாநில நிர்வாக குழு உறுப்பினர் நாரா.கலைநாதன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இதுபோல தரமற்ற மருந்துகளை கொள்முதல் செய்ததை கண்டித்து அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் புதுவை எல்லைப்பிள்ளைசாவடியில் உள்ள மகளிர் மற்றும் குழந்தைகள் ஆஸ்பத்திரி முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு மாநில செயலாளர் ராஜாங்கம் தலைமை தாங்கினார். நகர செயலாளர் மதிவாணன், சி.ஐ.டி.யு. பொதுச்செயலாளர் சீனுவாசன், கொளஞ்சியப்பன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்