< Back
புதுச்சேரி
புதுச்சேரி
குண்டும், குழியுமான சாலையால் வாகன ஒட்டிகள் அவதி
|18 Sept 2023 11:02 PM IST
திருபுவனை அருகே குண்டும், குழியுமான சாலையால் வாகன ஒட்டிகள் அவதி அடைந்துள்ளனர்.
திருபுவனை
திருபுவனை அருகே உள்ள கொத்தபுரிநத்தம் உள்ளது. இங்கு ஏராளமான குடியிருப்புகள் உள்ளது. இங்கிருந்து வனத்தாம்பாளையம் செல்லும் ரோடு சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. சிறு மழை பெய்தால் கூடசாலை சேறும், சகதியுமாக மாறி விடுகிறது. நேற்று பெய்த மழையால் சாலையில் குளம்போல் தண்ணீர் தேங்கி நிற்கிறது. அந்த இடத்தில் வாகனங்கள் ஊர்ந்தபடி செல்கின்றன. பொதுமக்கள் சாலையை கடந்து செல்ல முடியாமல் அவதி அடைந்து வருகின்றனர். சேதமடைந்து சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.