< Back
புதுச்சேரி
புதுச்சேரி
கட்டிட மேஸ்திரி தூக்குப்போட்டு தற்கொலை
|29 July 2023 9:27 PM IST
காரைக்கால் அருகே கட்டிட மேஸ்திரி தூக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.
காரைக்கால்
காரைக்கால் கே.எஸ்.ஆர்.நகரில் வசிப்பவர் விஜயசங்கர் (வயது55). அவரது மனைவி சரோஜா. கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் புற்றுநோயால் இறந்துவிட்டார். இவரது மகன் தீபக் (30) திருமணமாகி தனியாக வசித்து வருகிறார். மனைவி இறந்த நாள் முதல் விஜயசங்கர் மதுவுக்கு அடிமையானார். தீபக் அடிக்கடி சென்று தனது தந்தையை பார்த்து வந்தார்.
இன்று காலை வழக்கம் போல், தீபக் தந்தையை காண சென்றபோது, அவர் வீட்டில் இல்லை. மொட்டை மாடிக்குச் சென்று பார்த்தபோது, அங்கு தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மனைவி இறந்த சோகத்தில் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து காரைக்கால் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.