< Back
புதுச்சேரி
புதுச்சேரியில் 4-வது நாளாக பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது
புதுச்சேரி

புதுச்சேரியில் 4-வது நாளாக பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது

தினத்தந்தி
|
14 March 2023 10:29 AM IST

புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமி தாக்கல் செய்த பட்ஜெட் மீதான விவாதம் இன்று நடைபெறுகிறது.

புதுச்சேரி,

புதுச்சேரி சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி நடந்து வருகிறது. முழு பட்ஜெட் தாக்கல் முதல் நாளான கடந்த 9-ந்தேதி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் உரையாற்றி கூட்டத்தை தொடங்கி வைத்தார்.

இந்த கூட்டத்தொடரில், புதுச்சேரி அரசின் நிதி பொறுப்பு வகிக்கும் முதல்-அமைச்சர் ரங்கசாமி நேற்று 2023-24-ம் நிதியாண்டிற்கான ரூ.11 ஆயிரத்து 600 கோடிக்கு முழு பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

இதைத் தொடர்ந்து புதுச்சேரியில் 4-வது நாளாக பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியுள்ளது. நேற்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இன்று பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறுகிறது.

மேலும் செய்திகள்