< Back
புதுச்சேரி
தொழிலாளியை கத்தியால் குத்திய சிறுவன்
புதுச்சேரி

தொழிலாளியை கத்தியால் குத்திய சிறுவன்

தினத்தந்தி
|
20 Aug 2023 10:32 PM IST

மூலக்குளம் அருகே மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்ற தகராறில் தொழிலாளியை கத்தியால் குத்திய சிறுவனை போலீசார் வழக்குப்பதிவு செய்து,தேடி வருகின்றனர்.

மூலக்குளம்

நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் ஜீவா (வயது 19). இவர் கடந்த 2 ஆண்டுகளாக தனது பெற்றோருடன் உழவர்கரை மடத்து வீதியில் தங்கியிருந்து கட்டிட வேலை செய்து வருகிறார். நேற்று இரவு ஜீவா உழவர்கரை எல்லை மாரியம்மன் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டு விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டு இருந்தார்.

உழவர்கரை -வில்லியனூர் மெயின் ரோட்டில் வந்தபோது, அதே பகுதியை சே்ாந்த 17 வயது சிறுவன், ஜீவாவை தடுத்து நிறுத்தி என் மீது மோட்டார் சைக்கிளை மோத பார்க்கீறாராயா? என்று கேட்டு தகராறு செய்துள்ளார். மேலும் தரக்குறைவாக திட்டி, மறைத்து வைத்திருந்த அரிவாளால் ஜீவாவை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச்சென்றான்.

வெட்டுக்காயம் அடைந்த ஜீவா கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த தாக்குதல் குறித்து ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய சிறுவனை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்