< Back
புதுச்சேரி
புதுச்சேரி
டெம்போ டிரைவரை மதுபாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல்
|15 Sept 2023 11:36 PM IST
மேட்டுப்பாளையத்தில் டெம்போ டிரைவரை மதுபாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
மூலக்குளம்
மேட்டுப்பாளையம் அடுத்த சண்முகபுரம் தெற்கு அணைக்கரை வீதியை சேர்ந்தவர் ரவிக்குமார் (வயது 26). டெம்போ டிரைவர். இவரது டெம்போவில் திலாசுபேட்டையை சேர்ந்த விக்னேஷ் (20), சாரம் பகுதியைச் சேர்ந்த விஜி (20) ஆகியோர் வந்து செல்வது வழக்கம். அப்போது அவர்கள் டெம்போவில் பயணம் செய்யும் பெண்களிடம் வரம்பு மீறி செயல்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவர்களை ரவிக்குமார் கண்டித்துள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த 2 பேரும் சேர்ந்து ரவிக்குமாரை மதுபாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.