< Back
புதுச்சேரி
கோவில் அர்ச்சகர் திடீர் சாவு
புதுச்சேரி

கோவில் அர்ச்சகர் திடீர் சாவு

தினத்தந்தி
|
11 Aug 2023 10:07 PM IST

திரு புவனை அருகே கோவில் அர்ச்சகர் திடீரென மயங்கி விழுந்து இறந்தார்.

திருபுவனை

திருபுவனை அருகே கலிதீர்த்தாள்குப்பத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் உள்ள பிள்ளையார் கோவில் அர்ச்சகராக இருந்தவர் ராஜா (வயது 37). இதற்காக கல்லூரி அருகே வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்தார்.

நேற்று வீட்டின் அருகே திடீரென மயங்கி விழுந்து இறந்தார். இதுகுறித்த தகவல் அறிந்து வந்த திருபுவனை போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் திருபுவனை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்