< Back
புதுச்சேரி
புதுச்சேரி
வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
|6 Feb 2023 9:10 PM IST
வேலைக்கு செல்லாததை கண்டித்ததால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை கொண்டார்.
புதுச்சேரி
புதுவை பழைய சாரம் கிழக்கு வீதியை சேர்ந்தவர் ஜெயமூர்த்தி-ரேணுகா தேவி தம்பதி. இவர்களது மூத்த மகன் பாலகிருஷ்ணன் (வயது 24), சரிவர வேலைக்கு எதுவும் செல்லாமல் மதுகுடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார். இதனை அவரது தாயார் கண்டித்ததாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த பாலகிருஷ்ணன் வீட்டில் யாரும் இல்லாத வேளையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இதுகுறித்து கோரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.