< Back
புதுச்சேரி
வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
புதுச்சேரி

வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

தினத்தந்தி
|
20 July 2022 11:16 PM IST

காரைக்காலில் சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் தொடா்புடைய வாலிபா் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

காரைக்கால்

காரைக்காலை அடுத்த திருநள்ளாறு நெய்வாச்சேரியை சேர்ந்த நந்தா (வயது 20). அவரது நண்பர் ராம்குமார் (20. இவர்கள் 2 பேரும் கடந்த மார்ச் மாதம் 13 சிறுமியை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் திருநள்ளாறு போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நந்தா, ராம்குமார் ஆகிய 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் ஜாமீனில் வெளியே வந்த இருவரும் திருநள்ளாறு போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட்டு வந்தனர்.

இந்தநிலையில் ராம்குமார் இன்று திடீரென வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து திருநள்ளாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்