< Back
புதுச்சேரி
வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
புதுச்சேரி

வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

தினத்தந்தி
|
5 Sept 2023 9:23 PM IST

காரைக்காலில் திருநங்கைகளுடன் சுற்றிய வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

காரைக்கால்

காரைக்கால் லெமேர் வீதி பெரோஸ் காலனியில் வசித்து வந்தவர் அமினூர் ரகுமான் (வயது 27). இவர் கடந்த சில ஆண்டுகளாக குடும்பத்துடன் சேர்ந்து வாழாமல் தனியாக வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளார். மேலும் பெண்கள் போல் உடையணிந்து திருநங்கைகளுடன் சேர்ந்து சுற்றியதாக கூறப்படுகிறது. மேலும் அவர் குடியிருக்கும் வீட்டுக்கு நீண்ட மாதங்களாக வாடகை கொடுக்காமல் இருந்துள்ளார். இதனால் அமினூர் ரகுமான் வெளியில் சென்றிருந்த நேரத்தில் அந்த வீட்டை உரிமையாளர் பூட்டு போட்டு பூட்டினார். அமினூர் ரகுமான் வீட்டின் பூட்டை உடைத்து வீட்டுக்குள் சென்று மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து காரைக்கால் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்