< Back
புதுச்சேரி
புதுச்சேரி
கஞ்சா கடத்திய வாலிபர் கைது
|4 Feb 2023 9:34 PM IST
கண்டமங்கலம்
கண்டமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரத்தினசபாபதி, சப்-இன்ஸ்பெக்டர் பிரேம்குமார், சத்யானந்தம் மற்றும் போலீசார் நேற்று இரவு மிட்டா மண்டகப்பட்டு கூட்டு ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்ற நபரை வழிமறித்து போலீசார் விசாரித்தபோது, அவர் கஞ்சா கடத்திச்சென்றது தெரியவந்தது. இது தொடர்பாக அவரை பிடித்து விசாரித்தபோது, பொறையூரை சேர்ந்த ரமேஷ் (வயது 23) என்பதும், இவர் புதுச்சேரியில் இருந்து விழுப்புரத்துக்கு கஞ்சா கடத்திச்செல்வதும் தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 1 கிலோ 300 கிராம் கஞ்சா, ஒரு செல்போன் மற்றும் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.