< Back
புதுச்சேரி
கஞ்சா விற்ற வாலிபர் கைது
புதுச்சேரி

கஞ்சா விற்ற வாலிபர் கைது

தினத்தந்தி
|
13 Oct 2023 9:31 PM IST

மேட்டுப்பாளையம் சாராயக்கடை அருகே கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி

மேட்டுப்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் புனிதராஜ் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மேட்டுப்பாளையம் குண்டு சாலையில் உள்ள சாராயக்கடை அருகே வாலிபர் ஒருவர் கஞ்சா பொட்டலங்களுடன் இருப்பது தெரியவந்தது. அவரை போலீஸ் நிலையம் அழைத்துச்சென்று விசாரணை நடத்தினார்கள். இதில் அவர், வில்லியனூர் கோபாலன்கடை அம்மா நகரை சேர்ந்த பிரதீப்குமார் (வயது19) என்பது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்து, 100 கிராம் கஞ்சா பொட்டலங்களையும் பறிமுதல் செய்தனர்.

அதேபோல் ரெட்டியார்பாளையம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட நடசேன் நகர் பகுதியில் பள்ளிக்கூடம் அருகே தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்ற முதலியார்பேட்டையை சேர்ந்த செல்வராஜ் (61) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் கடையில் இருந்து ரூ.6 ஆயிரம் மதிப்பிலான போதை பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்