< Back
புதுச்சேரி
கஞ்சா விற்ற வாலிபர் கைது
புதுச்சேரி

கஞ்சா விற்ற வாலிபர் கைது

தினத்தந்தி
|
24 Sept 2023 10:44 PM IST

வில்லியனூர் அருகே கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

வில்லியனூர்

புதுவையை அடுத்த மங்கலத்தில் வில்லியனூர் சாலை அய்யனார் கோவில் அருகே வாலிபர் ஒருவர் கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் மங்கலம் போலீசார் அங்கு விரைந்து சென்று, சந்தேகப்படும் படியாக நின்ற வாலிபரை சுற்றிவளைத்து பிடித்தனர்.

விசாரணையில் அவர் புதுச்சேரி உழவர்கரையை சேர்ந்த நாசர் என்ற அப்துர் நஷிர் (வயது20) என்பதும், அவர் தொழிலாளர்கள், மாணவர்களுக்கு கஞ்சா விற்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 100 கிராம் கஞ்சா, ஒரு கார், செல்போன் மற்றும் 1,000 ரூபாய் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினர்.

மேலும் செய்திகள்