< Back
புதுச்சேரி
தொழில்நுட்ப வார விழா
புதுச்சேரி

தொழில்நுட்ப வார விழா

தினத்தந்தி
|
16 July 2023 10:23 PM IST

காரைக்கால் மாதூரில் உள்ள வேளாண் அறிவியல் நிலையத்தில் தொழில்நுட்ப வார விழா தொடங்கியது.

காரைக்கால்

இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் 95-வது நிறுவன தினத்தை முன்னிட்டு, காரைக்கால் மாதூரில் உள்ள வேளாண் அறிவியல் நிலையத்தில் தொழில்நுட்ப வார விழா இன்று தொடங்கியது. விழாவுக்கு வேளாண் அறிவியல் நிலைய முதல்வர் ஜெயசங்கர் தலைமை தாங்கி பேசுகையில், உலக அளவில் உள்ள வேளாண் அமைப்புகளில் இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம் மிக பெரியதாகும். இதன் கீழ் 111 வேளாண் சார்ந்த நிறுவனங்கள், 71 வேளாண் பல்கலைக்கழகங்கள், 732 வேளாண் அறிவியல் நிலையங்கள் செயல்படுகின்றன. இவற்றின் மூலம் பல்வேறு வேளாண் தொழில்நுட்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டு பரவலாக்கப்பட்டு வருகின்றன என்று குறிப்பிட்டார்.

நிகழ்ச்சியில் தோட்டக்கலை பயிர்களின் உற்பத்தி திறனை மேம்படுத்தும் தொழில்நுட்பங்கள் குறித்து, தோட்டக்கலை தொழில்நுட்ப வல்லுனர் கதிரவன் பேசினார். தென்னை மரத்திற்கு வேர் வழியாக டானிக் அளிக்கும் தொழில்நுட்பம் செயல் விளக்கமாக காண்பிக்கப்பட்டது. பல்வேறு பயிர் ரகங்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் கருத்துக்காட்சியில் இடம் பெற்றன.

நிகழ்ச்சியில் கால்நடை தொழில்நுட்ப வல்லுனர் டாக்டர் கோபு, விரிவாக்க தொழில்நுட்ப வல்லுனர் செந்தில் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.

மேலும் செய்திகள்