< Back
புதுச்சேரி
புதுச்சேரி
வரி வசூல் சிறப்பு முகாம்
|13 Oct 2023 10:53 PM IST
நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்துக்குட்பட்ட 11 கிராம பஞ்சாயத்துகளில் வரி வசூல் சிறப்பு முகாம் நடக்கிறது.
நெட்டப்பாக்கம்
நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்துக்குட்பட்ட 11 கிராம பஞ்சாயத்துகளில் வரி வசூல் சிறப்பு முகாம் வருகிற 16-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை நடக்கிறது. நெட்டப்பாக்கம், கரியமாணிக்கம், மடுகரை மேற்கு, மடுகரை கிழக்கு, சூரமங்கலம், கல்மண்டபம், பண்டசோழநல்லூர், ஏரிப்பாக்கம், ஏம்பலம், செம்பியபாளையம், கோர்க்காடு, கரிக்கலாம்பாக்கம் பஞ்சாயத்துகளில் நடக்கிறது. இந்த முகாமில் வீட்டு வரி, தண்ணீர் வரி உள்ளிட்ட கொம்யூன் பஞ்சாயத்துக்கு செலுத்தவேண்டிய வரிகளை செலுத்தி, ஊழியர்களிடம் ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.