கடற்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்
|புதுவையில் ஆடி அமாவாசையை முன்னிட்டு கடற்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து கேரள மக்கள் உள்பட ஏராளமானோர் வழிபட்டனர்.
புதுச்சேரி
ஆடி அமாவாசையை முன்னிட்டு புதுவை கடற்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து கேரள மக்கள் உள்பட ஏராளமானோர் வழிபட்டனர்.
2 அமாவாசை
மாதந்தோறும் அமாவாசை வருவது வழக்கம். இதில் ஆடி, புரட்டாசி, தை ஆகிய மாதங்களில் வரும் அமாவாசை நாட்கள் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இந்துக்களால் நம்பப்படுகிறது. இந்த நாட்களில் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் (திதி) கொடுத்து வழிபடுவதன் மூலம் அவர்களது ஆசி பூரணமாக கிடைக்கும் என்பது நம்பிக்கை.
அதன்படி தற்போது ஆடி முதல் நாள் மற்றும் ஆடி 31-ந்தேதி ஆகிய 2 நாட்கள் அமாவாசை வருவது சிறப்புக்குரியதாக கருதப்படுகிறது. இதில் ஆடி 31-ந்தேதி வரும் அமாவாசையே சிறப்பானது. அன்றைய தினம் விரதம் இருப்பது, தர்ப்பணம் கொடுப்பதே உகந்ததாக கருதப்படுகிறது.
தர்ப்பணம்
அதே நேரத்தில் கேரள மாநிலத்தவர்கள் கார்கிடக அமாவாசை எனப்படும் இன்றைய அமாவாசையை கடைபிடித்தனர். இதையொட்டி புதுவையில் வசிக்கும் கேரள மக்கள் கடற்கரையில் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.
மேலும் கடற்கரையில் பிற மக்களும் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர். வருகிற ஆடி மாதம் 31-ந்தேதி அமாவாசையன்று பல்வேறு பகுதியில் இருந்து கடற்கரை சாலையில் சாமி சிலைகள் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு தீர்த்தவாரி நடைபெற உள்ளது.