< Back
புதுச்சேரி
வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் கண்காணிப்பு கேமரா
புதுச்சேரி

வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் கண்காணிப்பு கேமரா

தினத்தந்தி
|
28 Jun 2023 10:43 PM IST

காரைக்கால் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் கண்காணிப்பு கேமராவை அமைச்சர் சந்திரபிரியங்கா இயக்கி வைத்தார்.

காரைக்கால்

காரைக்கால் பைபாஸ் அரசு விளையாட்டுத்திடல் அருகே, வட்டார போக்குவரத்து அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலக பாதுகாப்பு மற்றும் அலுவலக வளாகத்தில் குற்றச்செயல்கள் நடைபெறாமல் தடுக்கும் விதமாக போக்குவரத்து அலுவலக உட்புறம் மற்றும் வெளிப்புறங்களில் ரூ.1 லட்சம் செலவில் 10 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

இதனை புதுச்சேரி போக்குவரத்துத்துறை அமைச்சர் சந்திர பிரியங்கா இன்று இயக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், நாஜிம் எம்.எல்.ஏ., மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன், சீனியர் போலீஸ் சூப்பிரண்டு மணீஷ் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்