< Back
புதுச்சேரி
புதுச்சேரி
புதுவை போலீஸ் நிலையங்களில் கண்காணிப்பு கேமரா
|4 July 2023 11:11 PM IST
புதுவை போலீஸ் நிலையங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட உள்ளது.
புதுச்சேரி
நாட்டில் அனைத்து போலீஸ் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது. புதுவை மாநிலத்திலும் இந்த உத்தரவை பின்பற்றி அனைத்து போலீஸ் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்த அரசு டெண்டர் விட்டது. முதல் கட்டமாக உருளையன்பேட்டை, ஒதியஞ்சாலை ஆகிய போலீஸ் நிலையங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அதன் பின்னர் மற்ற போலீஸ் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட உள்ளது.
இங்கு பொருத்தப்படும் கண்காணிப்பு கேமரா பதிவுகளை அந்தந்த போலீஸ் நிலையங்களில் பார்க்க முடியாது. ஆனால் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு மற்றும் போலீஸ் சித்ரவதைக்கு எதிரான கமிட்டி அலுவலகத்தில் இருக்கும் கட்டுப்பாட்டு அறையில் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.