< Back
புதுச்சேரி
புதுச்சேரி
ஓட்டலில் திடீர் தீ
|22 Sept 2023 10:59 PM IST
லாஸ்பேட்டை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஓட்டலில் நேற்று நள்ளிரவு திடீரென தீ விபத்து ஏற்படுத்தப்பட்டது.
லாஸ்பேட்டை
லாஸ்பேட்டை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஒரு தனியார் ஓட்டல் மாடியில் குவித்து வைக்கப்பட்டிருந்த குப்பைகள் நேற்று நள்ளிரவு திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஓட்டல் ஊழியர்கள், தீயை அணைக்க முயற்சித்தனர். அவர்களால் முடியவில்லை.
இதுபற்றி கோரிமேடு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது உடனே தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து ஓட்டல் மாடியில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். இதனால் அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
லாஸ்பேட்டை நவீன மீன் அங்காடி அருகே மாடு ஒன்று சேற்றில் சிக்கி இருப்பதாக வந்த தகவலின்பேரில் தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று மாட்டை பத்திரமாக மீட்டனர்.