< Back
புதுச்சேரி
கொத்தனார் திடீர் சாவு
புதுச்சேரி

கொத்தனார் திடீர் சாவு

தினத்தந்தி
|
6 May 2023 9:26 PM IST

பாகூர்

பாகூர் அடுத்த சோரியாங்குப்பம் நடுத்தெருவை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 35). கொத்தனார். அவரது மனைவி வெண்மதி. நேற்று சித்ரா பவுர்ணமியையொட்டி வெண்மதி திருவண்ணாமலை கோவிலுக்கு சென்றார். இதனால் வீட்டில் பிரபாகரன் மட்டும் தனியாக இருந்தார். இன்று காலை வெண்மதி வீட்டுக்கு வந்தபோது வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. நீண்ட நேரம் தட்டிப்பார்த்தும் திறக்காததால் பின்புறம் வழியாக வீட்டுக்குள் சென்று பார்த்தார். அப்போது படுக்கை அறையில் பிரபாகரன் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து பாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் குடிபோதையில் இறந்தாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்