< Back
புதுச்சேரி

புதுச்சேரி
ஓய்வூதியதாரர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு

17 April 2023 10:21 PM IST
புதுவையில் அரசு ஊழியர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி
மத்திய அரசு ஊழியர்களைப்போல் புதுவை அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு (38 சதவீதத்திலிருந்து 42 சதவீதமாக) அளிக்கப்பட்டுள்ளது. இந்த உயர்வு ஜனவரி 1-ந்தேதி முதல் முன்தேதியிட்டு வழங்கப்பட உள்ளது. இதேபோல் ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியம் பெறுவோருக்கும் 4 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்க புதுவை அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உயர்வும் ஜனவரி 1-ந்தேதி முதல் வழங்கப்பட உள்ளது. இதற்கான உத்தரவை நிதித்துறை சார்பு செயலாளர் அர்ஜூன் ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ளார்.