< Back
புதுச்சேரி
புதுச்சேரி
மாணவ, மாணவிகள் ஊர்வலம்
|31 Dec 2022 12:10 AM IST
போதையில்லா புதுச்சேரியை வலியுறுத்தி மாணவ, மாணவிகள் ஊர்வலம் நடத்தின
புதுச்சேரி
போதையில்லா புதுச்சேரியை உருவாக்கிடவும், அறிவியல்பூர்வமான கல்வி என்ற முழக்கத்தை வலியுறுத்தியும் பாலர் பட்டாம்பூச்சிகள் இயக்கத்தின் சார்பில் மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட ஊர்வலம் நடந்தது. புதுவை காமராஜர் சிலை அருகே இருந்து தொடங்கிய இந்த ஊர்வலத்துக்கு இயக்க ஒருங்கிணைப்பாளர் தரணி தலைமை தாங்கினார். ஊர்வலத்தில் இயக்க நிர்வாகிகள் ஹேமலதா, வர்ஷா, பவியஸ்ரீ, ஜென்னி, நன்மாறன், பாரதி உள்பட மாணவ, மாணவிகள் பலரும் கலந்துகொண்டனர். ஊர்வலத்தில் கலந்துகொண்டவர்கள் காந்தி, பாரதியார், ஜான்சிராணி ஆகியோரது படத்துடன் போதையில்லா புதுச்சேரி என்ற வாசகத்துடன் கூடிய பதாகைகளை ஏந்தி வந்தனர். இந்த ஊர்வலம் நேரு வீதி வழியாக மாதாகோவில் வீதியில் வந்து நிறைவடைந்தது. அங்கு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியும் நடந்தது.