< Back
புதுச்சேரி
கார் மோதி மாணவர்கள் படுகாயம்
புதுச்சேரி

கார் மோதி மாணவர்கள் படுகாயம்

தினத்தந்தி
|
26 Oct 2023 9:07 PM IST

கார் மோதி மாணவர்கள் 2 பேர் படுகாயம் அடைந்தனர். மதுபோதையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய கடலோர காவல்படை வீரரை போலீசார் கைது செய்தனர்.

திரு-பட்டினம்

கார்-மோட்டார் சைக்கிள் மோதல்

திரு-பட்டினம் போலகம் காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பழனிவேல் மகன் கிருபாநிதி (வயது 16). இவர் அங்குள்ள அரசு ஆண்கள் ஐ.டி.ஐ.யில் படித்து வருகிறார். இவர் தனது நண்பர் கீழையூர் அய்யனார் கோவில் தெருவைச் சேர்ந்த ஷாம்பிரகாஷ் (20) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்.

திரு-பட்டினம் மலையான் தெரு-காந்தி சாலை சந்திப்பில் திரும்பும்போது எதிரே வந்த கார் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டதில் படுகாயம் அடைந்த 2 பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

கடலோர காவல்படை வீரர் கைது

விபத்து குறித்து காரைக்கால் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது கடலோர காவல்படையில் பணிபுரியும் கேரளாவை சேர்ந்த விஷ்ணுநாத் (32) என்பவர் மதுபோதையில் காரை ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்தியது தெரியவந்தது.

இதைடுத்து அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்