< Back
புதுச்சேரி
புதுச்சேரி
பணி நேரத்தில் டாக்டர்கள், நர்சு இல்லாவிட்டால் கடும் நடவடிக்கை
|13 Sept 2023 10:54 PM IST
அரசு மருத்துவமனையில் பணி நேரத்தில் டாக்டர்கள், நர்சுகள் இல்லாவிட்டால் கடும் நடவடிக்கை என அமைச்சர் சந்திரபிரியங்கா எச்சரித்தார்.
காரைக்கால்
காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் போதிய டாக்டர்கள், நர்சுகள், ஆம்புலன்ஸ் வசதி இல்லாமலும், ஊழியர்கள் அலட்சிய போக்குடன் இருப்பதாகவும் விபத்து நடக்கும் பகுதிக்கு ஆம்புலன்ஸ் டிரைவர்கள் காலதாமதமாக செல்வதாகவும் தொடர் புகார் மாவட்ட நிர்வாகத்திற்கு வந்தது.
அதையடுத்து, புதுச்சேரி போக்குவரத்து துறை அமைச்சர் சந்திரா பிரியங்கா மற்றும் மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன் இன்று மாலை காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அமைச்சர் சந்திர பிரியங்கா டாக்டர்கள், செவிலியர்கள், ஆம்புலன்ஸ் டிரைவர்கள், லிப்ட் ஆபரேட்டர்கள் பணியில் தற்போது உள்ளனரா? என்று ஆய்வு செய்தார். மேலும் பணி நேரத்தில் பணியில் இல்லாதவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் எச்சரித்தார்.