< Back
புதுச்சேரி
குடிநீர் வினியோகம் நிறுத்தம்
புதுச்சேரி

குடிநீர் வினியோகம் நிறுத்தம்

தினத்தந்தி
|
27 May 2023 10:48 PM IST

புதுவை முதலியார்பேட்டை தேங்காய்த்திட்டு கீழ்நிலை மற்றும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் வரும் செவ்வாய்கிழமை குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது.

புதுச்சேரி

புதுவை பொதுப்பணித்துறை பொதுசுகாதார கோட்ட செயற்பொறியாளர் அலுவலக செய்திக்குறிப்பில் கூறியிருப் பதாவது:-

புதுவை முதலியார்பேடடை தேங்காய்த்திட்டு கீழ்நிலை மற்றும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் பராமரிப்பு மற்றும் தொட்டியை கழுவும் பணிகள் மேற்கொள்ளவிருப்பதால் செவ்வாய்க்கிழமை மதியம் 12 மணி முதல் 2 மணிவரை தேங்காய்த்திட்டு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் குடிநீர் வினியோகம் தடைபடும்.

இதேபோல் தியாகுமுதலியார் நகரிலும் பராமரிப்பு மற்றும் குடிநீர் தொட்டி கழுவும் பணிகள் நடைபெற உள்ளதால் வருகிற 31-ந்தேதி மதியம் 12 மணி முதல் 2 மணி வரை தியாகுமுதலியார் நகர், ஜான்பால் நகர், பாரதிதாசன் நகர், கடலூர் ரோடு, பட்டம்மாள் நகர், இந்திராநகர், தில்லை நகர், புவன்கரே வீதி மற்றம் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குடிநீர் வினியோகம் தடைபடும்.

உழந்தை நீர்த்தேக்க தொட்டியில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளவிருப்பதால் வருகிற 1-ந்தேதி விடுதலை நகர், பாரதிமில் நகர், அய்யப்பசாமி நகர், திரு.வி.க. நகர், பாரதிதாசன் நகர், கடலூர் ரோடு, புவன்கரே வீதி (கிழக்கு), அப்துல்கலாம் நகர், மேற்கு பகுதி முழுவதும் மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் குடிநீர் வினியோகம் தடைபடும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்