< Back
புதுச்சேரி
புதுச்சேரி
புனித அந்தோணியார் ஆலய தேர்பவனி
|5 July 2023 10:07 PM IST
காரைக்காலில் புனித அந்தோணியார் ஆலய தேர்பவனி நடைப்பெற்றது.
காரைக்கால்
காரைக்கால் காமராஜர் சாலையில் உள்ள புனித அந்தோணியார் ஆலய ஆண்டு விழா கடந்த மாதம் (ஜூன்) 25-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழா நாட்களில் காலை, மாலை நேரத்தில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. நேற்று இரவு காரைக்கால் புனித தேற்றரவு அன்னை ஆலய பங்குத்தந்தை பீட்டர் ஹென்றி ஜேசுவா அடிகளார் தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது. அதனை தொடர்ந்து மின்விளக்கு அலங்காரத்தில் பெரிய தேர்பவனி நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர்.