புதுவையில் புதிய டி.ஜி.பி.யாக ஸ்ரீனிவாசன் பொறுப்பேற்பு
|புதுவையில் புதிய டி.ஜி.பி.யாக ஸ்ரீனிவாசன் பொறுப்பேற்றுக்கொண்டார். அவர் கவர்னர், முதல்-அமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
புதுச்சேரி
புதிய டி.ஜி.பி.யாக ஸ்ரீனிவாசன் பொறுப்பேற்றுக்கொண்டார். அவர் கவர்னர், முதல்-அமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
புதிய டி.ஜி.பி.
புதுச்சேரி மாநில போலீஸ் டி.ஜி.பி.யாக மனோஜ் குமார் லால் பணியாற்றி வந்தார். அவர் திடீரென டெல்லிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக மாநில புதிய டி.ஜி.பி.யாக ஸ்ரீனிவாசனை மத்திய உள்துறை அமைச்சகம் நியமித்தது.
இந்தநிலையில் இன்று காலை காவல்துறை தலைமை அலுவலகத்தில் புதிய போலீஸ் டி.ஜி.பி.யாக ஸ்ரீனிவாசன் பொறுப்பேற்றுக் கொண்டார். முன்னதாக போலீஸ் அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றார்.
கவர்னர், முதல்-அமைச்சரிடம் வாழ்த்து
விழாவில் கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. ஆனந்தமோகன், சீனியர் போலீஸ் சூப்பிரண்டுகள், போலீஸ் சூப்பிரண்டுகள் உள்பட பலர் கலந்து கொண்டு சால்வை அணிவித்தும், பூங்கொத்து கொடுத்தும் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர்.
தொடர்ந்து கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆகியோரை நேரில் சந்தித்து போலீஸ் டி.ஜி.பி. ஸ்ரீனிவாசன் வாழ்த்து பெற்றார்.