< Back
புதுச்சேரி
புதுச்சேரி
மருத்துவ கல்லூரிகளுக்கு இடையேயான விளையாட்டு, கலாசார போட்டிகள்
|16 Sept 2023 10:37 PM IST
புதுச்சோியில் மருத்துவ கல்லூாிகளுக்கு இடையேயான விளையாட்டு, கலாசார போட்டிகள் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது.
புதுச்சேரி
புதுவை கதிர்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மாணவர் சங்கம் சார்பில் புதுவை-தமிழ்நாடு மருத்துவக் கல்லூரிகளுக்கு இடையேயான விளையாட்டு மற்றும் கலாசார போட்டி (அத்வைதா) தொடக்க விழா இன்று நடந்தது. விழாவை கல்லூரி இயக்குனர் உதயக்குமார், மருத்துவ கண்காணிப்பாளர் ஜோசப் ராஜேஷ் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில் மாணவ-மாணவிகளுக்கு தனித்தனியாக கிரிக்கெட், கூடைப்பந்து, டேபிள் டென்னிஸ், கேரம் உள்ளிட்ட போட்டிகளும், பேச்சுப்போட்டி, நாடகம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது. இதில் புதுச்சேரி மற்றும் தமிழகத்தை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட மருத்துவக் கல்லூரிகளில் இருந்து மாணவ-மாணவிகள் பலர் பங்கேற்றுள்ளனர். இந்த போட்டி நாளை மறுநாள் (திங்கட்கிழமை) வரை நடக்கிறது.