சிறைச்சாலை, மதுபோதை மறுவாழ்வு மையங்களில் சிறப்பு மருத்துவ முகாம்
|சிறைச்சாலை, மதுபோதை மறுவாழ்வு மையங்களில் சிறப்பு மருத்துவ முகாம் குறித்து கலெக்டர் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
காரைக்கால்
புதுச்சேரி எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் சிறை கைதிகள், மதுபோதை மறுவாழ்வு மையம் மற்றும் முதியோர் இல்லங்களில் உள்ளவர்களுக்கு, எச்.ஐ.வி. பரிசோதனை, பால்வினை நோய், கணைய அழற்சி நோய், காசநோய் உள்ளிட்ட பொது மருத்துவ சோதனைகளை நடத்துவது குறித்து ஆலோசனை கூட்டம் காரைக்கால் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன் தலைமை தாங்கினார். புதுச்சேரி எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் திட்ட இயக்குனர் சித்ராதேவி, மாவட்ட மருத்துவ கண்காணிப்பாளர் கண்ணகி, காரைக்கால் சிறைத்துறை கண்காணிப்பாளர் கோபிநாத், சமூக நலத்துறை உதவி இயக்குனர் ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் வருகிற 21-ந்தேதி முதல் அடுத்த மாதம் (அக்டோபர்) 21-ந்தேதி வரை ஒரு மாதம் சிறைச்சாலை, மதுபோதை மறுவாழ்வு மையம் மற்றும் முதியோர் இல்லங்களில் சிறப்பு மருத்துவ முகாமை நடத்த முடிவு செய்யப்பட்டது.