< Back
புதுச்சேரி
புதுச்சேரி
பொதுமக்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்
|12 Aug 2023 9:27 PM IST
புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரி சார்பில் பொதுமக்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைப்பெற்றது.
காரைக்கால்
காரைக்கால் மாவட்டத்தில் ஒவ்வொரு மாதமும் 2 சனிக்கிழமைகளில், புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரி சார்பில் சிறப்பு மருத்துவக் குழு காரைக்கால் வருகை புரிந்து அரசு ஆஸ்பத்திரியில் பொதுமக்களுக்கு சிகிச்சை மற்றும் ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர். அதன்படி இன்று நரம்பியல் மற்றும் மூளை, தண்டுவட அறுவை சிகிச்சை சிறப்பு முகாம் நடந்தது. இதற்காக புதுச்சேரி ஜிப்மரில் இருந்து சிறப்பு மருத்துவர்கள் வருகை புரிந்து பொதுமக்களுக்கு சிகிச்சை மற்றும் ஆலோசனைகளை வழங்கினர். காலை 10 மணி முதல் பகல் 12 மணி வரை இந்த சிறப்பு முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.