< Back
புதுச்சேரி
சிறப்பு கூறு நிதியை வேறு துறைக்கு பயன்படுத்தக் கூடாது
புதுச்சேரி

சிறப்பு கூறு நிதியை வேறு துறைக்கு பயன்படுத்தக் கூடாது

தினத்தந்தி
|
7 Oct 2023 10:17 PM IST

பட்டியல் சமூக மக்களுக்கான சிறப்பு கூறு நிதியை வேறு துறைக்கு பயன்படுத்தக் கூடாது என அமைச்சர் சந்திர பிரியங்காவிடம் வலியுறுத்தப்பட்டது.

காரைக்கால்

காரைக்கால் தலித் பழங்குடியின அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பில் வன்கொடுமை தடுப்பு சட்டத்திற்கு வித்திட்ட இளையபெருமாள் நூற்றாண்டு விழா நடந்தது. விழாவிற்கு தலித்சேனா தலைவர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். விழாவில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் சந்திர பிரியங்கா, தமிழக எம்.எல்.ஏ. சிந்தனை செல்வன், தலித் சேனா தேசிய தலைவர் திருஞானம் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினர். விழா முடிவில் கூட்டமைப்பு சார்பில், அமைச்சர் சந்திரபிரியங்காவிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

பட்டியல் சமூக மக்களுக்கான சிறப்பு கூறு நிதியை தொடர்பில்லாத துறைகளுக்கு பயன்படுத்த கூடாது. ஆரம்ப கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரை அனைத்து பட்டியலின மாணவர்களுக்கும் இலவச கல்வி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்