சிறப்பு துப்புரவு பணி
|காரைக்காலில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு துப்பரவு முகாம் நடைபெற்றது.
காரைக்கால்
மகாத்மா காந்தியின் பிறந்த தினத்தை முன்னிட்டு அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தூய்மையே சேவை என்ற திட்டத்தின் கீழ் காரைக்காலில் அமைந்துள்ள 18 வார்டுகளில் இன்று ஒரு மணி நேர சிறப்பு துப்புரவு முகாம் நடைபெற்றது. முகாமில் நகராட்சி மற்றும் ஹெச்.ஆர்.ஸ்கொயர் நிறுவனத்தைச் சேர்ந்த தூய்மை பணியாளர்கள், சுய உதவி குழுக்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு தூய்மை பணியில் ஈடுபட்டனர். நெடுங்காடு அரசு நடுநிலைப்பள்ளியில் நடந்த சிறப்பு துப்புரவு முகாமை போக்குவரத்துத்துறை அமைச்சர் சந்திரபிரியங்கா தலைமை தாங்கி, பள்ளி வளாகத்தில் தூய்மை பணியில் ஈடுபட்டார்.
காரைக்கால் வடக்கு தொகுதிக்கு உட்பட்ட கீழக்காசாக்குடி அம்மையார் நகர் வார்டில் நடந்த துப்புரவு முகாமை திருமுருகன் எம்.எல்.ஏ., தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர் சத்யா, ஹெச்.ஆர்.ஸ்கொயர் நிறுவனத்தைச் சேர்ந்த தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.