< Back
புதுச்சேரி
சிறப்பு துப்புரவு பணி
புதுச்சேரி

சிறப்பு துப்புரவு பணி

தினத்தந்தி
|
30 July 2023 9:57 PM IST

புதுவை பூ.புதுக்குப்பம் கடற்கரையில் சிறப்பு துப்புரவு பணி நடைபெற்றது.

அரியாங்குப்பம்

மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து மணவெளி தொகுதி பூ.புதுக்குப்பம் கடற்கரை பகுதியில் சிறப்பு துப்புரவு முகாம் நடத்தியது. சபாநாயகர் செல்வம் தலைமை தாங்கி துப்புரவு பணியை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ், உதவி பொறியாளர் நாகராஜன், இளநிலை பொறியாளர்கள் அகிலன், சுரேஷ், புதுக்குப்பம் கிராம பஞ்சாயத்தார்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர். அவர்கள் அனைவரும் கடற்கரை பகுதியில் துப்புரவு பணியில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்