< Back
புதுச்சேரி
பாரதியார் சிலைக்கு, சபாநாயகர் மரியாதை
புதுச்சேரி

பாரதியார் சிலைக்கு, சபாநாயகர் மரியாதை

தினத்தந்தி
|
11 Sep 2023 4:19 PM GMT

பாரதியார் சிலைக்கு அரசு சார்பில் சபாநாயகர் செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

புதுச்சேரி

புதுச்சேரி அரசு சார்பில் மகாகவி சுப்பிரமணிய பாரதியார் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. அதையொட்டி பாரதி பூங்காவில் அமைந்துள்ள அவரது சிலைக்கு சபாநாயகர் செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் அமைச்சர்கள் லட்சுமிநாராயணன், சாய்.சரவணன்குமார், அரசு செயலாளர் நெடுஞ்செழியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து ஈஸ்வரன் கோவில் வீதியில் அமைந்துள்ள மகாகவி பாரதியார் நினைவு அருங்காட்சியகத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இதில் சபாநாயகர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டு பாரதியார் உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

மேலும் செய்திகள்