< Back
புதுச்சேரி
வேகமாக நிரம்பும் சொர்ணாவூர் அணை
புதுச்சேரி

வேகமாக நிரம்பும் சொர்ணாவூர் அணை

தினத்தந்தி
|
29 Sep 2023 5:50 PM GMT

தென்பெண்ணை ஆற்றில் பெருக்கெடுக்கும் வெள்ளநீரால் சொர்ணாவூர் அணை வேகமாக நிரம்பி வருகிறது. இங்கிருந்து திறக்கப்படும் தண்ணீர் மூலம் பாகூர் ஏரியையும் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பாகூர்

தென்பெண்ணை ஆற்றில் பெருக்கெடுக்கும் வெள்ளநீரால் சொர்ணாவூர் அணை வேகமாக நிரம்பி வருகிறது. இங்கிருந்து திறக்கப்படும் தண்ணீர் மூலம் பாகூர் ஏரியையும் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சாத்தனூர் அணை திறப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சாத்தனூர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. அணையில் இருந்து 1,000 கன அடி தண்ணீர் தென்பெண்ணையாற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.

இந்த தண்ணீர் புதுவையின் எல்லைப் பகுதியான கரையாம்புத்தூர் அருகே உள்ள சொர்ணாவூர் அணைக்கு இன்று நள்ளிரவு வந்தடைந்தது. இதனால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து கடல்போல் காட்சியளிக்கிறது. அணையில் இருந்து ஒரு மதகின் வழியாக தண்ணீர் திறக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

பாகூர் ஏரிக்கு தண்ணீர் திறப்பு

இதற்கிடையே சொர்ணாவூர் அணையில் இருந்து பங்காரு வாய்க்கால் மூலமாக பாகூர் ஏரிக்கு தண்ணீர் கொண்டு வர பொதுப்பணித்துறை அதிகாரிகள் 4 மதகுகளை திறந்து உள்ளனர். அதன்வழியாக தண்ணீர் சீறிப்பாய்ந்து செல்கிறது. இந்த தண்ணீர் ஓரிரு நாளில் பாகூர் ஏரியை வந்தடையும்.

தென்பெண்ணையாறு வறண்டு கிடந்த நிலையில் தண்ணீர் வந்ததால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அணையை பொதுமக்கள் நேரில் வந்து பார்வையிட்டு ரசித்து வருகின்றனர். ஆற்றின் நீர்வரத்து நிலவரத்தை பாகூர் நீர் பாசனப்பிரிவு ஊழியர்கள் கண்காணித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்