< Back
புதுச்சேரி
தாய் இறந்த அதிர்ச்சியில் மகன் சாவு
புதுச்சேரி

தாய் இறந்த அதிர்ச்சியில் மகன் சாவு

தினத்தந்தி
|
23 July 2023 9:42 PM IST

காரைக்கால் அருகே கீழகாசாக்குடியில் தாய் இறந்த அதிர்ச்சியில் மகனும் திடீரென இறந்தார்.

கோட்டுச்சேரி

காரைக்கால் அருகே கீழகாசாக்குடியில் தாய் இறந்த அதிர்ச்சியில் மகனும் திடீரென இறந்தார்.

உடல்நலக்குறைவு

காரைக்கால் அருகே கீழகாசாக்குடி வள்ளியம்மை நகரைச் சேர்ந்தவர் வளர்மதி. இவரது கணவர் ராமதாஸ் இறந்த பின்பு அவரது தம்பி கிருஷ்ணமூர்த்தியை திருமணம் செய்து கொண்டார். முதல் கணவருக்கு ராஜேஷ் (38) என்ற மகனும், 2-வது கணவருக்கு மதியழகன் (31) என்ற மகனும் உள்ளனர். இந்தநிலையில் வளர்மதிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

இதனால் புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர் கடந்த 20-ந்தேதி சிகிச்சை பலனின்றி இறந்தார். மறுநாளே அவரது உடலை உறவினர்கள் அடக்கம் செய்தனர்.

இதற்கிடையே நேற்று வளர்மதிக்கு வீட்டில் படையல் போட்டு பூஜை செய்தனர். பூஜையில் படைத்த உணவை அனைவரும் சாப்பிட்டனர்.

மகனும் சாவு

அப்போது ராஜேசும் சாப்பிட்டு விட்டு உறவினர் ஒருவரது வீட்டில் போய் படுத்துள்ளார். சற்று நேரத்தில் அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அவரை உறவினர்கள் ஆம்புலன்ஸ் மூலம் காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், ராஜேஷ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் கோட்டுச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தாய் இறந்த அதிர்ச்சி அடங்குவதற்குள் மகனும் பலியான சம்பவம் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்