< Back
புதுச்சேரி
புதுச்சேரி
தாயை உருட்டுகட்டையால் தாக்கிய மகன் கைது
|27 Jun 2023 10:14 PM IST
புதுவையில் தாயை உருட்டுகட்டையால் தாக்கிய மகனை போலீசார் கைது செய்தனர்.
திருக்கனூர்
திருக்கனூர் அருகே உள்ள செட்டிப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ஜெயா (வயது 85). இவர் தனது மகன் தேசிங்கு (49) என்பவருடன் வசித்து வருகிறார். அடிக்கடி குடித்து விட்டு வந்து தேசிங்கு தனது தாயிடம் தகராறில் ஈடுபடுவது வழக்கம்.
சம்பவத்தன்றும் குடிபோதையில் வீட்டுக்கு வந்த தேசிங்கு, தாய் ஜெயாவிடம் வாய்த்தகராறில் ஈடுபட்டார். இதில் ஆத்திரமடைந்த தேசிங்கு, அங்கிருந்த உருட்டுகட்டையால் ஜெயாவை தாக்கினார். இதில் அவருக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் மண்ணாடிப்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து ஜெயாவின் மகள் ராஜேஸ்வரி அளித்த புகாரின்பேரில் திருக்கனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேசிங்கை கைது செய்தனர்.