ராணுவ வீரர் மனைவி தற்கொலை
|மகனின் நினைவு நாளில் ராணுவ வீரரின் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
கோட்டுச்சேரி
மகனின் நினைவு நாளில் ராணுவ வீரரின் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
மகனின் நினைவு நாள்
வரிச்சிக்குடி ராகவேந்திரா நகரை சேர்ந்தவர் சந்திரசேகரன். முன்னாள் ராணுவ வீரர். இவரது மனைவி சாந்தி. இவர்களுடைய மகன் ஜெய்சந்தோஷ். இவர் கடந்த ஒரு ஆண்டுக்கு முன் இறந்துவிட்டார். இதனால் தாய் சாந்தி மகனின் நினைவாகவே இருந்துவந்தார். அவ்வப்போது தற்கொலைக்கும் முயன்று வந்துள்ளார்.
இ்ந்த நிலையில் மகன் ஜெய்சந்தோஷின் நினைவு நாளை முன்னிட்டு கழுகுமேட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் விளக்கேற்றிவிட்டு வரும்படி கணவர் சந்திரசேரனிடம் சாந்தி கூறியுள்ளார். அதன்பேரில் அவர் அங்கு சென்று மகனின் நினைவிடத்தில் விளக்கேற்றிவிட்டு வீட்டுக்கு வந்தார்.
தற்கொலை
இந்தநிலையில் சாந்தி வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதை பார்த்து சந்திரசேகரன் அதிர்ச்சி அடைந்தார். இது குறித்த புகாரின்பேரில் கோட்டுச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மகன் நினைவு நாளில் தாய் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.