< Back
புதுச்சேரி
ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை விரைவுபடுத்த வேண்டும்
புதுச்சேரி

ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை விரைவுபடுத்த வேண்டும்

தினத்தந்தி
|
10 July 2023 11:28 PM IST

ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை விரைவாக செய்யுமாறு முதல்-அமைச்சர் ரங்கசாமி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

புதுச்சேரி

ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை விரைவாக செய்யுமாறு முதல்-அமைச்சர் ரங்கசாமி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

பெரிய மார்க்கெட்

புதுவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் பல்வேறு பணிகள் நடந்து வருகின்றன. சில பணிகள் அரைகுறையாக உள்ளன. இதுதவிர பெரிய மார்க்கெட் மேம்பாட்டு பணிகள் அறிவிக்கப்பட்டு இன்னும் தொடங்கப்படவில்லை. பெரிய மார்க்கெட்டை காலி செய்ய அங்குள்ள வியாபாரிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் மேம்பாட்டு பணிகளை தொடங்க முடியாத நிலை நிலவுகிறது.

இதேபோல் புதுவை புதிய பஸ்நிலைய மேம்பாட்டு பணிகளும் இழுபறியில் உள்ளது. பணிகளை தொடங்கிட பூமிபூஜை போடப்பட்டு ஆயத்த பணிகள் மேற்கொள்ளும் நிலையில் வியாபாரிகளும், ஆட்டோ டிரைவர்களும் எதிர்ப்பு தெரிவித்ததால் பணிகள் நிறுத்தப்பட்டு உள்ளன. ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளுக்கு தொடர்ந்து எதிர்ப்புகள் வரும் நிலையில் பல்வேறு விமர்சனங்களும் எழுந்துள்ளன.

ரங்கசாமி ஆலோசனை

இந்தநிலையில் முதல்-அமைச்சர் ரங்கசாமி, தலைமை செயலாளர் ராஜீவ்வர்மா, பொதுப்பணித்துறை செயலாளர் மணிகண்டன் ஆகியோரை அழைத்து பேசினார். அப்போது இந்த பணிகளை செய்வதில் உள்ள பிரச்சினைகள் தொடர்பாக விவாதிக்கப்பட்டது. வியாபாரிகளும், பொதுமக்களும் பாதிக்கப்படாதவாறு நடவடிக்கை எடுத்து விரைவாக பணிகளை செய்யுமாறு முதல்-அமைச்சர் ரங்கசாமி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். அப்போது சபாநாயகர் செல்வம், அமைச்சர் தேனீ.ஜெயக்குமார், நேரு எம்.எல்.ஏ.ஆகியோர் உடனிருந்தனர்.

விரைவில் தொடங்க...

தொடர்ந்து முதல்-அமைச்சர் ரங்கசாமி நிருபர்களிடம் கூறும்போது, நிறுத்தப்பட்டுள்ள பணிகள் அனைத்தும் விரைவில் தொடங்கப்படும் என்று தெரிவித்தார்.

மேலும் செய்திகள்