சிறுதானிய உணவு போட்டி
|பாரதிதாசன் மகளிர் கல்லூரியில் சிறுதானிய உணவு போட்டி நடைபெற்றது.
புதுச்சேரி
தேசிய ஊட்டச்சத்து மாதத்தை முன்னிட்டு புதுவை பாரதிதாசன் மகளிர் கல்லூரியில் சிறுதானியத்தில் இனிப்பு மற்றும் கார வகை உணவு கண்காட்சி போட்டி நடந்தது. இதில் மாணவிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்துகொண்டு சிறுதானிய உணவுகளை காட்சிப்படுத்தி இருந்தனர்.
கண்காட்சியில் பிரெஞ்சுத்துறை பேராசிரியர் சலிலா, ஜிப்மர் ஆஸ்பத்திரியின் தலைமை உணவியல் நிபுணர் மாதவி, செண்பகா ஓட்டலின் முதன்மை சமையல் நிபுணர் கார்த்திகேயன், புதுவை நகராட்சி உதவி சமூக அமைப்பாளர்கள் சுசீலா, விஜயலட்சுமி, தொழில்முனைவோர் விஜயலட்சுமி ஆகியோர் நடுவர்களாக இருந்து சிறந்த உணவுகளை தேர்ந்தெடுத்தனர். இதில் சிறந்த உணவு வகைகளை தயார் செய்தவர்களுக்கு கல்லூரி முதல்வர் ராஜிசுகுமார் பரிசுகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் மனையியல் துறை தலைவர் தனலட்சுமி, பேராசிரியர்கள் ஆஷா, ஷோபனா உள்பட பலர் கலந்துகொண்டனர்.