< Back
புதுச்சேரி
ஆயுஷ் மருத்துவமனையில் சிவா எம்.எல்.ஏ. திடீர் ஆய்வு
புதுச்சேரி

ஆயுஷ் மருத்துவமனையில் சிவா எம்.எல்.ஏ. திடீர் ஆய்வு

தினத்தந்தி
|
23 Aug 2023 10:07 PM IST

வில்லியனூர் ஆயுஷ் மருத்துவமனையில் சிவா எம்.எல்.ஏ. திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

வில்லியனூர்

வில்லியனூரில் ரூ.7 கோடியே 93 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள ஆயுஷ் மருத்துவமனை கடந்த 8-ந் தேதி புதுவைக்கு வந்திருந்த ஜனாதிபதி முர்மு, காணொலிக்காட்சி மூலம் திறந்து வைத்தார். இந்த மருத்துவமனையில் எந்த அடிப்படை வசதிகளும் இல்லை, டாக்டர்கள், பணியாளர்கள் இல்லை என்று சிவா எம்.எல்.ஏ. குற்றஞ்சாட்டினார்.இந்த நிலையில் ஆயுஷ் மருத்துவமனையில் சிவா எம்.எல்.ஏ. இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பணியில் இருந்த ஆயுர்வேத பிரிவின் நோடல் அதிகாரி டாக்டர் பத்மவதம்மா, மருத்துவ அதிகாரிகள் ஜீவானந்த், முத்துலட்சுமி ஆகியோரிடம் மருத்துவமனை செயல்பாடு, நோயாளிகளின் வருகை, மருந்தகத்தில் வினியோகிக்கப்படும் மருந்துகள் குறித்து கேட்டறிந்தார். பின்னர் மருத்துவமனை கட்டிடத்தை பார்வையிட்டார். அப்போது, ஆயுர்வேத கிளினிக்காக செயல்பட்டதை ஆயுஷ் மருத்துவமனைக்கு மாற்றி உள்ளதும், ஆயுஷ் மருத்துவமனைக்கு என்று தனியாக டாக்டர்கள், பணியாளர்கள், மருத்துவ உபகரணங்கள், உள்கட்டமைப்பு வசதிகள் ஏதும் இல்லாதது தெரியவந்தது. ஆயுஷ் மருத்துவமனை முழு வீச்சில் இயங்க துரித நடவடிக்கை எடுக்குமாறு அங்கிருந்த அதிகாரிகளிடம் சிவா எம்.எல்.ஏ. கூறினார்.

மேலும் செய்திகள்