சிறுமிக்கு பாலியல் தொல்லை; போக்சோ சட்டத்தில் டிரைவர் கைது
|காரைக்காலில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
காரைக்கால்
காரைக்காலில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
பாலியல் தொல்லை
காரைக்கால் நகர் பகுதியான தோமாஸ் அருள் திடலில் வசிப்பவர் மணிவண்ணன் (வயது 36). டிரைவரான இவர், காரைக்காலை அடுத்த திரு-பட்டினத்தில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு அடிக்கடி சென்று வருவது வழக்கம்.
அப்போது அந்த பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
சிறையில் அடைப்பு
இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் திரு-பட்டினம் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் திரு-பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் லெனின் பாரதி மற்றும் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து மணிவண்ணனை கைது செய்தனர்.
பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.